பண மதிப்பு இழப்பு
நமது மாண்புமிகு பிரதமரின் பண மதிப்பு இழப்பு
திட்டத்தை எதிர்க்கும் அனைவரும் சொல்லும் முதல் காரணம், தகுந்த முன்னேற்பாடுகள்
செய்யாமல் இத்திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார் என்பது தான்.
ஆனால் நமது மாண்புமிகு பிரதமர் தகுந்த
முன்னேற்பாடுகள் செய்து தான் இத்திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்.
முதற்கண் கடந்த செப்டம்பர் இறுதி வரை அவகாசம்
கொடுத்து கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே அதை தெரிவித்து அதற்கான
வரியை செலுத்தி கணக்கை நெறிப்படுத்துமாறு அறிவித்திருந்தார். அப்படி செய்யத்தவறினால் கடுமையான நடவடிக்கைகள்
தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் மக்கள் அப்படிச்செய்யவில்லை. அத்திட்டம் தோல்வி அடைந்தது.
இரண்டாவதாக பண மதிப்பு இழப்பு திட்டத்தை செயல்
படுத்த வசதியாக புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க உத்தரவிட்டார். இதை ரகசியமாக செய்ய நினைத்தார். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் மதிப்பில் அச்சிட்டால்
வெளியே தெரிந்துவிடும் என்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஏற்பாடு
செய்தார். அதோடு ஒரு இரண்டாயிரம் ரூபாய்
நோட்டு இரண்டு ஆயிரம் அல்லது நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக
இருக்கும். என்பதுவும் ஒரு காரணம். ஆனால் இதையும் ரகசியமாக வைத்திருக்க
முடியவில்லை. ரிசர்வ் வங்கியிலேயே கருப்பு
ஆடுகள் இருந்திருக்கிறார்கள்.
ஆகவே இனிமேல் தள்ளிப்போட முடியாது என்று பண
மதிப்பு இழப்பு அறிவுப்பை வெளியிட்டார்.
இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்று
அவருக்கு தெரியும். ஆனால் மக்கள் அதை
ஏற்றுகொண்டார்கள். அவரின் திட்டத்தை
மக்கள் பெருமளவில் வரவேற்றனர். இப்பொழுது
அதை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தான்..
இதோடு முடியவில்லை. இன்னும் பலதிட்டங்களை வைத்திருக்கிறார். மக்கள் எதிர்ப்பு காட்டாமல் முழு மனதோடு ஆதரவு
கொடுக்க வேண்டும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
நன்றி.
வணக்கம்.
அன்புடன்
துரை எஸ்.ஜெயச்சந்திரன்.
January 25, 2017